search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோட்டோரோலா ரேசர்"

    மோட்டோரோலா நிறுவனத்தின் ரேசர் ஸ்மார்ட்போனின் காப்புரிமை விவரங்கள் வெளியாகி இருக்கிறது. இதில் ரேசர் ஸ்மார்ட்போனில் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. #Motorola #motorazr



    லெனோவோவின் மோட்டோரோலா பிராண்டு ரேசர் சீரிஸ் ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் பிப்ரவரி மாதத்தில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில், புதிய ரேசர் ஸ்மார்ட்போனின் காப்புரிமை விவரங்கள் வெளியாகியுள்ளது.

    மோட்டோரோலா சார்பில் டிசம்பர் 17, 2018 ஆம் தேதி பதிவிடப்பட்ட காப்புரிமையில் புதிய ரேசர் ஸ்மார்ட்போனில் மடிக்க்கூடிய 
    டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இந்த டிஸ்ப்ளே உள்புறம் மடிக்கக்கூடியதாகவும், வெளிப்புறம் சிறிய ஸ்கிரீன் இடம்பெற்றிருக்கிறது. மோட்டோரோலா மொபிலிட்டி படிவத்தில் ரேசர் என்ற பெயர் இடம்பெறவில்லை.


    புகைப்படம் நன்றி: TMDN

    எனினும், இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு பார்க்க ரேசர் போன்றே காட்சியளிக்கிறது. முந்தைய ரேசர் போனில் பட்டன்கள் மற்றும் ஸ்கிரீன் இடம்பெற்றிருந்த நிலையில், இம்முறை ஒற்றை ஸ்கிரீன் மடிக்கக்கூடிய வசதியுடன் வழங்கப்பட்டிருக்கிறது.

    முன்னதாக வெளியான தகவல்களில் மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போன் 1500 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,07,107) விலையில் அமெரிக்காவில் மட்டும் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மோட்டோ ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் ஹார்டுவேர் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    பிப்ரவரி 2018 இல் லெனோவோ தலைமை செயல் அதிகாரி ரேசர் போன் புதிய வெர்ஷனின் டீசரை வெளியிட்டிருந்தார். பின் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் அந்நிறுவனம் பதிவு செய்திருந்த சில காப்புரிமைகளில் மடிக்கக்கூடிய ஸ்கிரீன் கொண்ட ஃப்ளிப் போன் வெளியாகலாம் என கூறப்பட்டது.
    ×